காப்பி அடிப்பது நமக்கு ஒன்று தூரமான சங்கதி இல்லை. தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் காலம் காலமாக இதைதான் வெகு சிறப்பாக செய்து வந்திருக்கிறார்கள் நம்முடைய புகழ் பெற்ற இயக்குனர்கள். கே பாலச்சந்தர் என்று ஒரு இயக்குனர்.அவரின் பல படங்கள் சிறப்பானவை என்று பெருவாரியான மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் அவருடைய உண்மையான நிறம் தெரிந்தவர்கள் வெகு சிலரே.
இவர் சண்டை போட்டு வந்த எம் ஜி யார், அழுகைக்கு பெயர் பெற்ற சிவாஜி போன்றவர்களின் காலத்தில் தனக்கு என்று ஒரு வித்தியாசமான பாதையை வகுத்துக்கொண்டவர். அதாவது அப்படிதான் மக்கள் இன்றளவும் இவரை கணித்துக்கொண்டு வருகிறார்கள். போதாத குறைக்கு இன்று வரை நமெக்கெல்லாம் நடித்து கலை சேவை செய்து கொண்டு வரும் கமல்,ரஜினி போன்ற பெரிய தலைகள் எல்லாம் இவரின் அருமையான கண்டுபிடிப்புகள்தான் கேட்க வேண்டுமா என்ன?
ஆரம்பத்தில் வெறும் பிராமண குடும்பத்தின் சச்சரவுகளையும்,கோமாளித்தனங்களையும் நகைச்சுவையாக படம் எடுத்து பெயர் வாங்கிய இந்த இயக்குனர் சிகரம் அரங்கேற்றம் என்ற புரட்சி படத்தின் மூலம் தன்னுடைய பாதையை சடாரென்று மாற்றிக்கொண்டார். அதன் பின் அவரின் படங்கள் எல்லாம் பெண்ணியம் சமத்துவம் பேச ஆரம்பித்தன. எப்படி இப்படி ஒரு இயக்குனர் நமக்கு கிடைத்தார் என்று மக்கள் மூளை இல்லாமல் ஆச்சர்யப்பட்டார்கள். அவள் ஒரு தொடர்கதை வந்த போது இவர் ஒரு தலை சிறந்த இயக்குனர்தான் என்று ஐ எஸ் ஐ முத்திரை குத்தி அவரை விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்ட இடத்தில் வைத்து ஆராதிக்க ஆரம்பித்து விட்டார்கள். பாவம் ரித்விக் கட்டக் என்று ஒரு ஆள் இருந்ததே நமெக்கெல்லாம் அப்போது தெரியாது. நமக்குத்தான் தெரியாதே ஒழிய திரு கே பாலச்சந்தருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.புகழ் பெற்ற வங்காள மொழி படங்கள், புகழே அடையாத படங்கள் என்று இவர் வங்காள அபாரங்களை தமிழுக்கு இறக்குமதி செய்தார்.
இன்று இவரின் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, நூல் வேலி போன்ற படங்களை பார்த்தால் அவற்றில் தமிழ்த்தனம் பொடுகு அளவுக்கு கூட இருக்காது என்பதை தாரளமாக கண்டு பிடிக்கலாம். நிழல் நிஜமாகின்றது என்று ஒரு படம். அதில் கூட நம் உலக நாயகன் "ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே" என்று பெண்ணியம் பாடுவார். இந்த படம் ஒரு மலையாள இறக்குமதி. நல்லவேளை அதை இயக்குனர் சிகரம் மறைக்கவில்லை. நம் இயக்குனர்கள் நல்ல கதைகளை படம் எடுக்க சொன்னால் நல்ல படங்களை படம் எடுப்பதில் போட்டி போடுகிறார்கள். பின் யார்தான் ஒழுங்காக படம் செய்தார்கள் என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது. இருக்கிறார்கள். நம் தமிழுலும் கலப்படம் இலாத சொந்த படங்கள் தரமான படங்கள் செய்பவர்கள் இருந்தார்கள். அவர்கள்....
THE WINDMILLS
WORLD OF WORDS
Search This Blog
Monday, November 22, 2010
Sunday, November 21, 2010
The Maiden Post
ஏதோதோ நினைவுகளில் மூழ்கி இருக்கும் பொழுது அவற்றை எல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுவது இயல்பானதுதான். என் எழுத்துக்கள் எத்தனை பேரை கோபப்படுத்தும் என்று தெரியவில்லை. ஆனால் எதோ ஒரு மூலையில் என்னைப் போல சிந்திக்கும் ஒரு ஆள் கூடவா இல்லாமல் போய்விடுவார்? இல்லாவிட்டால் என்ன புதியதாக ஒரு தகவல் கிடைத்ததே என்று என்னை மன்னிக்காமலா போய்விடுவீர்கள்? தமிழ் சினிமாவை பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆர்வம். காரணம் தமிழ் சினிமா என்னை கவர்ந்தது ஏறக்குறைய ஒரு கடந்த காலமாகவே ஆகி விட்டது. எனக்கு மட்டுமல்லாது இன்னும் பல பேருக்கு இப்படித்தான் இருக்கும் என தோன்றுகிறது. உடனே இதோ இன்னொரு பழமைவாதி கம்பியுடருக்குள் புகுந்துகொண்டான் பார் என்று குரல் எழுப்ப வேண்டாம். தமிழ் சினிமா என்றில்லை தமிழ் சினிமா இசை கூட அதன் அழகை துறந்துவிட்டாதாகவே எண்ண தோன்றுகிறது. எம் எஸ் வி இசை போல் ஒரு சங்கீத வெள்ளம் அடியோடு நின்று போய்விட்டது. இளையாராஜாவின் காலம் கடந்த பாடல்கள் கடந்து போய் விட்டன. ஏன் ரகுமான் பாடல்கள் கூட முனுமுனுக்கும் தகுதியை இழந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டன. இளைய தலைமுறை விரும்பும் பெரும்பாலான பாடல்கள் பொதுவாகவே ஒரே மாதிரி அதாவது கழிப்பறைக்குள் உட்காந்துகொண்டு முக்கி முனங்கி பேசுவது போல ஒலிக்கின்றன. இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து இதே கழிப்பறை கானங்கள் ஒரு கிளாசிக் ரேஞ்சுக்கு வந்துவிடும் என்பதுதான் தவிர்க்க முடியாத பயங்கரம். என்னை பொறுத்த வரை காலங்கள் எவ்வளவு ஆனாலும் சில பாடல்கள் மட்டுமே கிளாசிக் என்கிற கட்டத்தை எட்டுகின்றன. கீழ்க்கண்டவற்றில் எல்லாமே கிளாசிக் வகைதான் 'யார் அந்த நிலவு?', மன்னவனே அழலாமா?, கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச்சொல்ல, அனுபவம் புதுமை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், பட்டியலுக்கு முடிவு வரும் முன் தூக்கம் உத்திரவாதம். இதுவரை படித்த கண்களுக்கும் கோபம் வராத உள்ளங்களுக்கும் ஒரு இனிய இடைவேளை.
Subscribe to:
Posts (Atom)