Search This Blog

Monday, November 22, 2010

காப்பி அடிப்பது நமக்கு ஒன்று தூரமான சங்கதி இல்லை. தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் காலம் காலமாக இதைதான் வெகு சிறப்பாக செய்து வந்திருக்கிறார்கள் நம்முடைய புகழ் பெற்ற இயக்குனர்கள். கே பாலச்சந்தர் என்று ஒரு இயக்குனர்.அவரின் பல படங்கள் சிறப்பானவை என்று பெருவாரியான மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் அவருடைய உண்மையான நிறம் தெரிந்தவர்கள் வெகு சிலரே.
       இவர் சண்டை போட்டு வந்த எம் ஜி யார், அழுகைக்கு பெயர் பெற்ற சிவாஜி போன்றவர்களின் காலத்தில் தனக்கு என்று ஒரு வித்தியாசமான பாதையை வகுத்துக்கொண்டவர். அதாவது அப்படிதான் மக்கள் இன்றளவும் இவரை கணித்துக்கொண்டு வருகிறார்கள். போதாத குறைக்கு இன்று வரை நமெக்கெல்லாம் நடித்து கலை சேவை செய்து கொண்டு வரும் கமல்,ரஜினி போன்ற பெரிய தலைகள் எல்லாம் இவரின் அருமையான கண்டுபிடிப்புகள்தான் கேட்க வேண்டுமா என்ன?                   
        ஆரம்பத்தில் வெறும் பிராமண குடும்பத்தின் சச்சரவுகளையும்,கோமாளித்தனங்களையும் நகைச்சுவையாக படம் எடுத்து பெயர் வாங்கிய இந்த இயக்குனர் சிகரம் அரங்கேற்றம் என்ற புரட்சி படத்தின் மூலம் தன்னுடைய பாதையை சடாரென்று மாற்றிக்கொண்டார். அதன் பின் அவரின் படங்கள் எல்லாம் பெண்ணியம் சமத்துவம் பேச ஆரம்பித்தன. எப்படி இப்படி ஒரு இயக்குனர் நமக்கு கிடைத்தார் என்று மக்கள் மூளை இல்லாமல் ஆச்சர்யப்பட்டார்கள். அவள் ஒரு தொடர்கதை வந்த போது இவர் ஒரு தலை சிறந்த இயக்குனர்தான் என்று ஐ எஸ் ஐ முத்திரை குத்தி அவரை விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்ட இடத்தில் வைத்து ஆராதிக்க ஆரம்பித்து விட்டார்கள். பாவம் ரித்விக் கட்டக் என்று ஒரு ஆள் இருந்ததே நமெக்கெல்லாம் அப்போது தெரியாது. நமக்குத்தான் தெரியாதே ஒழிய திரு கே பாலச்சந்தருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.புகழ் பெற்ற வங்காள மொழி படங்கள், புகழே அடையாத படங்கள் என்று இவர் வங்காள அபாரங்களை தமிழுக்கு இறக்குமதி செய்தார்.
        இன்று இவரின் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, நூல் வேலி போன்ற படங்களை பார்த்தால் அவற்றில் தமிழ்த்தனம் பொடுகு அளவுக்கு கூட இருக்காது என்பதை தாரளமாக கண்டு பிடிக்கலாம். நிழல் நிஜமாகின்றது என்று ஒரு படம். அதில் கூட நம் உலக நாயகன் "ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே" என்று பெண்ணியம் பாடுவார். இந்த படம் ஒரு மலையாள இறக்குமதி. நல்லவேளை அதை இயக்குனர் சிகரம் மறைக்கவில்லை. நம் இயக்குனர்கள் நல்ல கதைகளை படம் எடுக்க சொன்னால் நல்ல படங்களை படம் எடுப்பதில் போட்டி போடுகிறார்கள். பின் யார்தான் ஒழுங்காக படம் செய்தார்கள் என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது. இருக்கிறார்கள். நம் தமிழுலும் கலப்படம் இலாத  சொந்த படங்கள் தரமான படங்கள் செய்பவர்கள் இருந்தார்கள். அவர்கள்....

1 comment:

  1. நல்ல இருக்கு தொடர்ந்திருக்கலாமே !

    ReplyDelete